Thursday, December 11, 2008

~~இதயத்தில் இன்ப வலி ~~


கவலைகளை தாங்கத்தான் இதயம் வைத்தானோ,
இல்லை நேசிக்கும் நெஞ்சங்களை தாங்கத்தான் இதயம் செய்தானோ.
எண்ணத்தில் ஏந்தி நின்றேன் அன்பு நெஞ்சங்களை,
அட கவலைகள் எதுக்கு இங்கே இடம் போதவில்லை.
நினைவினில் நிறுத்திட துயரம் என்ன என் நன்பானா?
வெயிலினில் மறைத்திட என் நட்பு என்ன பனித்துளியா?
குறைந்திடாத அன்பைத் தந்தே இன்று கதறிடும் நெஞ்சம் கொண்டேன்..
உண்மைதான் அதே நெஞ்சம் இன்று அந்த நட்பைதானே காக்கிறது..
அன்புக்கு அளவு வைக்க அடி மனதில் போராட்டம்,
அடங்காத வயதுக்கு தேவை இந்த மனப் போராட்டம்.
என்னால் சிரிப்பவர் (பிழைப்பவர்) புன்னகையில் நான் வாழ்கிறேன்,
அதில் குளித்திடும் என் இதயத்தில் துயர் துடைக்கிறேன்.
தினம் பிழைக்கிறேன்..

Tuesday, November 18, 2008

0.0=> தனிமையின் நாள் இன்று ~~


தனிமை இருளில் தவிக்கின்ற இதயம்..

வெளிச்சம் தேடி ஓடும் பாதையில்..

நண்பர்கள் தீப்பந்தங்களாய்..

தவிர்த்து ஓடினேன், அவர்கள் அருமை மறந்து..

பெண்களின் நட்பு மின்மினிப் பூச்சியாய்..

சொந்தமில்லா ஒன்று, அறிந்தே நாடினேன்..

இன்று போகும் திசை தெரியாமல்,

நிற்கும் இடம் புரியாமல்,

ஏந்த மறந்த தீப்பந்தங்கள் மனதை சுட்டன,
மறைந்த மின்மினிகள் என்னை இருளில் விட்டன,

தட்டுத் தடுமாறி தேடிப் பார்க்கிறேன்..

வாழ்க்கை பயணத்தில் இன்று,

பாதை மாறி நின்று பேதலிக்கிறேன்..


விரைவினில் மாற்றி அமைக்கிறேன்..

Friday, November 14, 2008

0.0.=> வாழ்க்கை உந்தன் கையில் ~~


மனிதனின் குணம் மனது நிறைய ஆசை..

வாழ்க்கையின் நிஜம் உழைப்புக்கேற்ற ஊதியம்..

ஆசையை அடைய போராட்டம்..

தேசங்கள் கடந்து உழைத்திட்டோம்..

ஆயினும் ஆசைகள் தீரவில்லை..

எனென்றால் கடவுளுக்கு என்னை பிடிக்கவில்லை..

(அழுகின்றான் அடிமனதில் ஒரு மனிதம்..)

வாழ்க்கையின் முடிவென்று ஒன்றே உண்டு..

உன் மரணம் வந்தால் நீ காண்பாய் அன்று..

நீ இருக்கும் வாழ்க்கை நேரம் தன்னில்,

உள்ள நோக்கம் இறுதியில் மகிழ்ச்சி ஒன்றே..

துன்பம் உன் அழுகைகில்லை..

இன்பம் உன் சிரிப்புக்கில்லை..

இரண்டும் உந்தன் வாழ்வின் வழி..

உன் இன்பன் இவ்விரண்டுக்கும் பொதுவினில் வந்தால்..

வாழ்க்கை உந்தன் கையில் வரும்.

Sunday, May 18, 2008

~ இன்றோடு ஒரு வருடம் என் வாழ்க்கையில் ~

நட்பே..



கனவுகள் பல கண்டு,
கடைமைகள் கருத்தில் கொண்டு..

கடல் தாங்கிய நீர் போல
நம் கண் தாங்கிய நீரோடு
அன்று பிரிந்த நாம்.. இன்று

இந்த சிறிய உலகத்தில்
அங்கொன்றும் இங்கொன்றும் சிறு சிறு புள்ளிகளாய்..

மறக்க மனம் இன்றி தேயும் நினைவுகள்,
நிற்க இடம் இன்றி ஓடும் நிமிடங்கள்..

நிறைய தோல்வி நிறைவான வெற்றி என்று
நிறைந்து வலியும் வாழ்கையின் ஓட்டத்தில்

ஒரு வருடம் காண்கின்றோம்..

கண்மூடி பார்கிறேன் மூடிய இமைகளை முட்டும் கண்ணீர்த்துளி..

பேச வார்த்தைகளின்றி அமைதி காக்கும் உள்ளத்தில் வலி..

பேசும் தூரத்தில் நீ இல்லை ஆனாலும்
வீசும் காற்றிடம் சொல்லி அனுப்புகிறேன் கேள்

"என்றும் உன் நினைவுடன் வாழும் உன் நண்பன் குணா "

Wednesday, May 7, 2008

~~~~~வாழ்கையில் வர்ணங்கள்~~~~~

வாழ்கை பயணத்தில் செல்லும் பாதை எல்லாம்
வர்ணங்கள் பூசி அழங்கரிக்க ஆசை கொண்டேன்..



தொடும் தூரம் பயணத்தில் நின்று திரும்பிப் பார்த்தேன்,

அன்று தொட்டு வடித்த வர்ணங்களைவிட
விட்டு வந்த இடங்கள் கவலையை தந்தது..

விடுத்த இடங்களை நிறைத்து வடித்து முழுமை தர
காலம் திரும்பவில்லை ..

இனி எடுக்கும் வழியில் முழுதாய் பூசிட
முயன்று பார்த்தேன் முடியவில்லை..

என் சக்திக்கு மீறியது கிடைக்கவும் இல்லை,
கிடைத்த பலத்தை நான் வெறுக்கவும் இல்லை..

இன்று புரிந்துகொண்டேன்
"போராடாமல் வாழ்வது வாழ்க்கையும் இல்லை"
..

இந்த தொலை தூரப் பயணத்தின் நடுவில்
இன்று திரும்பிப் பார்கிறேன்,

நான் விட்டு வந்த இடங்கள் இல்லை
தொட்டு வடித்த வர்ணங்கள் மனதை வென்றன..

பல்லங்களில் விழுந்து நான் கட்டிய படிக்கட்டுகள்..
உயரங்களில் பலர் எனக்காக வடித்த சறுக்கல்கள்..

வலிகளுக்கும் வழிகளுக்கும் பொதுவாய் அமைந்த என் உயிர் நணபரகள..

இதில் எனக்காகவே தொடர்ந்து வந்த என் ன்ன..

இதற்க்கெல்லாம் பதில் சொல்ல விளையும் என் மனதை,
இரு கண்ணீர் துளிகள் விழுந்து சொல்லும் வார்த்தைகளில் மறைத்தேன்..

இன்றும் வாழ்கிறேன் வர்ணங்கள் கையிலேந்தி..

Monday, April 7, 2008

Tireless PASSION

A best day in the life of sekar not likely for most of the Indians to have in their life. Today he is not going to wear those old set of pads, gloves and the helmet and all his cricket wears. He had been wearing these things right from his 11th birthday till today when his father jagan handed over it as a gift to him especially for the interest he had in playing cricket. His saving from the two month salary which went as gift didn't worried him because he believed that hardly in the next 10years sekar will surely replace top class batsmen playing at retirement in the Indian cricket team at that time.

Today sekar is going to be in the chepak stadium for his country in the match India against Pakistan. Being born in chennai, he got the concentration due to his astonishing performance in the league matches last year with three double centuries consecutively being an opener and all the front lines of premier news papers sparkled his name in bold letters and the photos of his raised bat.

His manoeuvre and elusive way of cricket passion has brought him a umpteen fans from normal humans to top class cricketers who played for India. today he entered the stadium and he hardly know how many lakhs of people were sitting there for having a best cricketing action of all times. The toss has been put and India has won the toss. Sekar was at his foot edge as this could be the happiest news for any batsman at a situation like this.

The crowd is excited and thrown into peak of enjoyments. All are eagerly watching the center ground where one of their favorite players is going to start cracking the show. the Pakistan fielders are ready at the middle. As the lakhs and lakhs of eyes concentrating towards the rest room entrance of Indian side, two blue colored helmet came out into the ground crossing and kissing the four line rope. Sekar is already inside the ground. At the next few minutes the shining new ball hit the board laid after four line as like begging to leave it go beyond.

In the very next ball as noone expected the center stump piled out in air for a speediest ball by that bowler and the whole stadium dumped into dead silence. As sekar shed tears being one inside this silence, his father tapped at his shoulder sitting near to him " cool down son! ! Next year surely u will be there in the middle not losing the wicket early like this.. ok.. come on cheer up! ! see our master blaster is getting in"..

Not so soon sekar heard those last line he stood up waving indian flag in hands from the chair in the first line near the Indian cricketers restroom and cheered for sachin in his louder voice, within which he hided his tears and sorrow for being pushed out from entering this Indian cricket team in spite of his tireless effort and all the achievements he had made till now.
since these achievements and efforts are not enough for the selectors who are in need of something else for adding him into Indian cricket team.

" We want sixer! we want sixer! sachin...!! sachin..!!".. with a voice of tireless passion for India - sekar

Wednesday, March 19, 2008

The Beginning

I have no idea why created this blog for myself ! !

All these days, The things running inside me like the society, love, men, women, nature etc.. came out of my mind as poems and long written stories and even self prepared songs.

I have taken those feelings of mine to a limited circle of people whom i know and who all are interested in me.

just today i have created this blog with an idea that i can get bring those things out to you all and make everyone to feel the thinking of an individual and share your response for it.

So this is the way i am beginning with a confidence natural growth of mind and articles.

I believe you all will enjoy my thoughts and as well aswill think over it in all the ways.