கருகிய பூவின் தாகமாய்,
கலைந்த நம் காதல் நினைவினுள்ளே..
கலவர பூமியில் குருதியென,
கவலையும் நிறைந்தது மனதினுள்ளே..
~
வருடம் வயதொன்று ஆனதால்,
வலியும் விருந்துண்ண வந்ததோ..
விதியென விடைபெற்ற உன் முகம்,
மதியில் சலனத்தை கூட்டுவதோ..
~
வெளியில் வரவில்லை..
விழியில் பலமில்லை..
கானல் நீரான நம் வாழ்வுதனில்,
மாயக் கனவுலகில்..
நாட்டம் குறையவில்லை..
மீளத் துணிவுமில்லை..
~
அன்னை மடியில் உறைந்திருந்தும்,
வாழும் ஆசை தந்தவளே,
என் வலியின் விடியல் நீயடி..
நாளும் வாழ்ந்திடும் நரகத்திலே,
என் மனதின் மருத்துவம் நம் காதலடி..
~
அன்புடன்,
இவன்.
கலைந்த நம் காதல் நினைவினுள்ளே..
கலவர பூமியில் குருதியென,
கவலையும் நிறைந்தது மனதினுள்ளே..
~
வருடம் வயதொன்று ஆனதால்,
வலியும் விருந்துண்ண வந்ததோ..
விதியென விடைபெற்ற உன் முகம்,
மதியில் சலனத்தை கூட்டுவதோ..
~
விரைந்திடும் கண்ணீரும் நீயன்றி,
காதல் மடியின்றி..வெளியில் வரவில்லை..
விழியில் பலமில்லை..
கானல் நீரான நம் வாழ்வுதனில்,
மாயக் கனவுலகில்..
நாட்டம் குறையவில்லை..
மீளத் துணிவுமில்லை..
~
அன்னை மடியில் உறைந்திருந்தும்,
அன்னையே உலகாய் வாழ்ந்திருந்தும்,
உன் இடத்தின் வெறுமை குறையவில்லை..
~வாழும் ஆசை தந்தவளே,
என் வலியின் விடியல் நீயடி..
நாளும் வாழ்ந்திடும் நரகத்திலே,
என் மனதின் மருத்துவம் நம் காதலடி..
~
அன்புடன்,
இவன்.


