நட்பே..

கனவுகள் பல கண்டு,
கடைமைகள் கருத்தில் கொண்டு..
கடல் தாங்கிய நீர் போல
நம் கண் தாங்கிய நீரோடு
அன்று பிரிந்த நாம்.. இன்று
இந்த சிறிய உலகத்தில்
அங்கொன்றும் இங்கொன்றும் சிறு சிறு புள்ளிகளாய்..
மறக்க மனம் இன்றி தேயும் நினைவுகள்,
நிற்க இடம் இன்றி ஓடும் நிமிடங்கள்..
நிறைய தோல்வி நிறைவான வெற்றி என்று
நிறைந்து வலியும் வாழ்கையின் ஓட்டத்தில்
ஒரு வருடம் காண்கின்றோம்..
கண்மூடி பார்கிறேன் மூடிய இமைகளை முட்டும் கண்ணீர்த்துளி..
பேச வார்த்தைகளின்றி அமைதி காக்கும் உள்ளத்தில் வலி..
பேசும் தூரத்தில் நீ இல்லை ஆனாலும்
வீசும் காற்றிடம் சொல்லி அனுப்புகிறேன் கேள்
"என்றும் உன் நினைவுடன் வாழும் உன் நண்பன் குணா "


good one again... the photograph for this one is not creating the real effect for the words. the photograph for "tireless passion" gave some effect when you read the whole story. choose some photograph which creates a mood for that particular writing.
ReplyDelete