Tuesday, October 9, 2012

Sunday, September 16, 2012

காதல்!!!

என் தனிப்பட்ட அனுபவம் காதல பத்தி தோனுற சில கருத்துக்கள் இதெல்லாம் தாங்க.. தேவை படுபவர்களுக்கு உதவட்டும்.



» காதல் என்னைக்கும் ஒருத்தன மனுஷத்தன்மைய இழக்க வைக்காது.. அப்படி ஒருத்தங்க இழந்தா அது காதலையும் மீறின ஒரு வெறி..

» என்னைக்கு புரிதல், நம்பிக்கை பின்னாடி ஒரு காதல் முளைக்குதோ, அது சேர்ந்தாலும், பிரிந்தாலும் தோற்காது.

» காதல்ல முதல், இரண்டாம்னு வரிசை படுத்துறது காதல் கிடையாது. ஒருத்தர் மேல நம் முழு மனதை வைத்து காதலிக்க முடியும்னா, அவங்க வாழ்க்கைல எப்போ வந்தாலும், அதுதான் உண்மையான காதல்.

» எல்லா பெத்தவங்க காதலுக்கு எதிரிங்க இல்ல, அது அவங்க இத்தன நாள் வாழ்ந்து வளர்ந்த சமுதாயம் ஏத்துக்குற பக்குவதுலதான் இருக்கு.

» இன்றைக்கு சொல்லியும் சொல்லாமலும் தோற்று போன பல காதல்கள் பெற்றோர்களுக்காகதான்.

» காதல் பண்ணி கல்யாணம் பண்ணிக்குறது நம்மோட விருப்பம் மட்டும் இல்ல, அது நம்ம கடமையும் கூட. நமக்கு நினைவு தெரியாத நாள்ல இருந்து வளத்தினது நம்ம பெத்தவங்கனா.. அவங்க நினைவு தெரிஞ்சு வாழுற இந்த சமுதாயத்துல, அவங்க கௌரவத்த காப்பாத்த வேண்டியது நம்ம கடமையும் கூட. இது பெற்றவர்கள் சுயநலம்னு நினைக்கலாம் இல்ல நம்ம சுயநலம்னு சொல்லலாம். இதுல பெத்தவங்களோட அணுகுமுறைதான் முடிவு எப்புடி அமைய போகுதுன்னு முடிவு பண்ணும்

» காதல் பண்ணும்போதே குடும்பத்த பத்தி நினைக்கணும்.. இல்ல எப்பவுமே அத பத்தி நினைக்ககூடாது.. இதுல எங்க மாறுனாலும் அது கஷ்டத்துல தான் போய் முடியும்.

» சந்தோசம், கோபம், துக்கம், மாதிரி வலியும் ஒரு உணர்வுதான். அத அதன் படி அனுபவிக்காம, ஆறுதலுக்காக குடி போன்ற பழக்கங்களை சேர்வது.. கோழைத்தனம்.. அது அந்த காதலையும் கொச்சை படுத்திவிடும்.

» காதல் தோல்விக்கு மருந்து இன்னொரு காதல் மட்டுமே.. அது எதன் மீது வேண்டுமானாலும் இருக்கலாம்.

மீண்டும்.. வாழ்க்கை பயணத்தில் சந்திக்கிறேன்..

Wednesday, September 5, 2012

~மத்தளம்~

சத்தம் இல்லாத நாட்களுக்குள் இருக்கும் அந்தக் கலவரம்,

கண்கள் அறிந்திட வாய்பில்லாதொரு நரகம்.
~
அணிவகுக்கத் துவங்கிவிட்ட ஆச்சரிய கணங்கள்,
அதிகாரம் இல்லாத அடிமைச் சிறை கம்பிகள்.
~
சுயத்தை இழக்க போகும் சாலையின் வளைவில்,
மறைந்திருக்கும் பாதையின் இரத்தச் சுவடுகள்.
~
இயந்திரம் ஆகச்செய்து இருகும் உடலெங்கும்,
நரம்புகள் உறப்பற்றுப் போகும் உணர்வுகள்.
~
ஊனமுற்ற ஒரு பந்தய குதிரையின்,
பலம் இழந்த ஒரு வாழ்க்கை பயணம்.
~
கேள்விகளற்ற ஒரு மாய உலகின் அரசன்,
மரணத்தின் முன் தந்த ஒரு ஜனனத்தில் சில நாட்கள்.

நந்தலாலா!!!

ஏங்கிக் கிடப்பானோ ஆண்டவன்,
எதை எங்கே உடைத்து சேர்க்கலாம் என்று..
வாழ்க்கையை சிதைத்துப் பார்க்கின்றான் - பின்,
அவனே நல்வழி சேர்க்கின்றான்..
~
எங்கே வைத்ததோ, மனது தன் ஆசையை,
அங்கே வைக்கிறான் கேள்விக்குறி..
முட்டியும் மோதியும் இல்லை என்றானபின்,
மெல்லத் திறக்கிறான் வாழ்வின் வழி..
~
அழுதேன், தொழுதேன்,
அடிமையாய்த் திரிந்தேன்,
வேண்டியதொன்று கிடைத்திடத்தான்..
இழந்தேன், விழுந்தேன்,
ஆத்திகம் துறந்தேன்,
அதையும் அறிந்தவன் பொறுத்திருந்தான்..
~
வழிகள் எல்லாம் வரைந்தவன் அவனே - அதில்,
விதியென செய்தவன் வாகனம் தன்னில்,
மதியெனும் வேகம் கூடவும் குறையவும்,
ஓடித்தான் கற்றேன் சில வாழும் விதிகளை..
~
கற்றலும் முடிவிலா கடல்போல நீள – நான்,
பெற்றதர்க்கெல்லாம் பொருள் தேடி ஓட,
நின்று ஓய்வெடுத்த நிழல் எல்லாம் கானலாய்,
கரைந்தோட மிதக்கின்றேன் நானும் ஓர் ஓடமாய்