Tuesday, November 18, 2008

0.0=> தனிமையின் நாள் இன்று ~~


தனிமை இருளில் தவிக்கின்ற இதயம்..

வெளிச்சம் தேடி ஓடும் பாதையில்..

நண்பர்கள் தீப்பந்தங்களாய்..

தவிர்த்து ஓடினேன், அவர்கள் அருமை மறந்து..

பெண்களின் நட்பு மின்மினிப் பூச்சியாய்..

சொந்தமில்லா ஒன்று, அறிந்தே நாடினேன்..

இன்று போகும் திசை தெரியாமல்,

நிற்கும் இடம் புரியாமல்,

ஏந்த மறந்த தீப்பந்தங்கள் மனதை சுட்டன,
மறைந்த மின்மினிகள் என்னை இருளில் விட்டன,

தட்டுத் தடுமாறி தேடிப் பார்க்கிறேன்..

வாழ்க்கை பயணத்தில் இன்று,

பாதை மாறி நின்று பேதலிக்கிறேன்..


விரைவினில் மாற்றி அமைக்கிறேன்..

No comments:

Post a Comment

Have Pride in How Far U have come and Have Faith in How Far U can go ! ! !