துணையாய் என் கவிதைக் கதவுகளை தட்டித் திறக்கிறேன்..
உணர்வுகளை ஆழ கற்கும் என் வயதின் வலியை,
வேதனை தீரும் வரை உன்னிடம் கொட்டித் தீர்கின்றேன்..
பதில் நாடி கூறவில்லை.. என்னை மறக்க, உன் மடியைமிக்க நல்ல இடமுமில்லை..
நான் அறியா தூரத்தில் அவள் வாழ்கிறாள், நல்ல மகளாக..
அவள் அறியா தூரத்தில் நான் வாழ்கிறேன், அவள் கணவனாக..
கேட்கும் செவி இன்று அவள் குரல் மட்டுமே தேடுகிறது.
பார்க்கும் கண்கள் அவள் முகம் நாடியே ஓடுகிறது.
காற்று கூட அவள் சுவாசம் கொண்டு வரும் தூரத்தில் இல்லை.
ஏமாற்றம் தரும் இந்த வாழ்கை எனக்கு பிடிக்கவில்லை..
நேற்று வரை நடந்ததெல்லாம் விதியின் செயல்,
இன்று முதல் நடப்பதெல்லாம் சனியின் விளையாடல்..
தொலைவில் நிற்கும் என் வாழ்க்கைதனை கட்டி இழுகின்றேன்.. முயற்சிக்கிறேன்..
அது கிட்டும் நேரம் எட்டும் தூரத்தில் அவள் நட்பை விதைகின்றேன்.
இழப்பின் வலி உறுதியென்று கற்று கொடுக்கிறது.. வாழ்க்கை,
இட்ட வழியில் அன்னையை இழந்த நன்பானை காட்டியது..
அவனுடன் கத்தி அழுதிட நித்தம் என் மனம் திக்கி தவிக்கிறது..
வாழ்க்கை எட்டாத தூரம் நின்று சிரிக்குது என்று புரிகிறது..
எதனை விட்டேன், எங்கு தவறினேன் ஒன்றும் புரியவில்லை.
ஒட்டிய முகத்திரை இட்டு வாழ்ந்திட எண்ணம் பணியவில்லை..
எத்தனை துயரம் கண்ட போதிலும் புன்னகை விலகவில்லை..
அத்தனைக்கும் பதில் ஒன்று வாழ்க்கை இன்றே முடிவதில்லை..
வாழ்வேன் :) :)


sir im raja... is doing software developing.... i want contact u sir plz rly me my mail id a.murugan.it@gmail.com
ReplyDeletehey guna... lovely... i like this post very much... reflects ur true self ? or got inspired by someone?
ReplyDelete