>>---------------------------------------<<மதிப்புக்குரிய என் வாழ்க்கையே,
>>---------------------------------------<<
அனுதினம் என்னை சோதித்தாய்,
உன்னை யாரென்று உணர வைத்தாய்..
என் உணர்வை கவிதையாக்கும் வரம் கொடுத்தாய்,
உதிர்ந்த என் சொற்களுக்கு வலு கொடுத்தாய்..
மகிழ்ச்சியின் கரு அறிய வலி தொடுத்தாய்,
வலியினை மறக்கும் பண்பை கற்றுக் கொடுத்தாய்..
இத்தனைக்கும் பலமான நினைவளித்தாய்,
அதில் மறந்துவிட்டேன் என்பதனை ஏன் பதித்து வைத்தாய்?????


No comments:
Post a Comment
Have Pride in How Far U have come and Have Faith in How Far U can go ! ! !