Sunday, June 7, 2009

.......................~~~ அன்னை தந்த நினைவுகள் ~~~..........


சொட்டிய கண்ணீரும் அனலாய் சுட்டிட்ட வெப்பம்,

கோப்பைத் தண்ணீரை அருகில் வைத்து,

பொட்டலம் கட்டிய சாதத்தை தந்து,

மாத்திரையை மறக்காமல் சாப்பிட சொன்னான் என் நண்பன்.

பசி ஏக்கத்தில் தூக்கிய கை தூக்கத்தில் இருப்பது போல் எழ மறுத்தது,

ஊட்டிவிட்டு அன்னை அன்று தூக்கிவிட்டுத் தாங்கிய தோழும் இல்லை.

அவள் காட்டிய அன்பினை கடனாய் காட்டிடக்கூட இங்கு ஆளும் இல்லை.

விட்டு சென்ற நண்பனின் அறைக்குள் கேட்டது புது பாட்டுச் சத்தம்,

காய்ச்சல் ஆண்ட என் மூளைக்குள்ளே அது வேட்டுச் சத்தம்.

மீண்டும் மருந்தினை நினைவூட்டிய என் நண்பனின் குரல் கேட்டு,

அன்னையின் நினைவிலே மூடிய கண்களை,

கட்டியிருந்த பொட்டலத்தின் திசை நோக்கி திணித்தேன்.. தவித்தேன்

2 comments:

  1. wonderfully expressed Guna... every word is very true and strong thought... keep going... i have stopped writing for a long time... this actually makes to start writing again...

    ReplyDelete
  2. Hey da, Good to see some serious writings like this....After God, mother is the only Human being loved by every Single Person..... But there r A lot of children longing for the mother's love n lot of mothers at their old age r longing for the love from their own blood brons. The question WHY is still unanswered in my mind.....??? Now Instead of thinking abt WHY, Started to think HOW...Yes How to support them.... Insha allah One day i will complete this question ....

    Good goin buddy..... and we all r most gifted person in this world.jus Keepong.....

    ReplyDelete

Have Pride in How Far U have come and Have Faith in How Far U can go ! ! !