Monday, May 18, 2009

~ நினைவுகளோடு ஒரு நடை பயணம் ~


இன்று போல் தெரிகிறது அன்று விட்டு வந்த நாள்..

உன்னை என்னும் போது நெஞ்சம் பெரும் பாரத்திலே இன்று நான்.

சுற்றும் முற்றும் பார்கிறேன், பலர் புன்னகைக்க கேட்கின்றேன்,

செத்து ஒன்றும் போகவில்லை உன்னை பிரிந்து, நித்தம் உன்னை தேடவில்லை என்னை மறந்து.

செல்லும் வழி இடையினிலே இடம் பார்த்து, கத்தும் பல நினைவுகளுள் உன்னை கோர்த்து,

விட்டு விட்டு துடித்து வந்த என் இதயம் இன்று கற்று கொண்டு நகருதடா வழி பார்த்து.

சொல்லப்போனால் ஒன்றும் இல்லை, இப்படித்தான் வாழ்க்கை என்று விரைந்து நான் ஓடுகின்றேன்..

வென்று வென்று ஓடி ஓடி, இன்று போல் நின்ற நாளில் எல்லாம்,

வலித்தது இதயம் மெல்ல, நிறைந்திட்ட உன் நினைவினாலே..

சொட்டு சொட்டாய் அதை கையில் எடுத்து - கண்ணீரிலே ஒரு கதை வடித்து.

எட்டும் தூரம் நீயும் இல்லை, எட்டி பார்க்க நேரம் இல்லை,

விட்டு வந்து இன்று இரு வருடம் - செல்லும்

நினைவுகளோடு ஒரு நடை பயணம்


அன்புடன் நன்பான் குணா ! ! !

2 comments:

Have Pride in How Far U have come and Have Faith in How Far U can go ! ! !