காதல் சொல்ல வந்தேன் காதலி,
தூக்கம் இமையிடம் இணைய மருத்ததடி,
தாக்கும் தனிமையை தூக்கில் ஏற்றி விட,
நேரில் வந்து என் நெஞ்சம் இயக்கிவிடு..
~
நேற்று இரவிலே நீ என் கனவிலே,
கால ஓட்டத்தில், இரு குழந்தை அருகிலே,
அன்பு கொஞ்சமல்ல, எளிதாய் எடுத்துச் சொல்ல..
ஒன்று இரண்டு என்று எண்ணி முத்தமிட,
கன்னம் தீண்டும் முன்னே, பிஞ்சு கைகள் குறுக்கிட,
வந்த வெட்கம் இன்று வேதனையை தூண்டிட..
துக்கம் மட்டுமே மிஞ்சிய வாழ்வில் - சொல்,
எப்படி கழிப்பேன் எஞ்சிய வாழ்வை..
உன் காதில் விழுகாத பாடல் ஒன்றில் இன்று..
பாதை தனியானதேனடி,
நம் வாழ்வு முடியாத நாளில் நின்று கொண்டு..
தோள்கள் தீண்டும் உந்தன் கைகள் உணர்கிறேன்,
காதல் பேசும் உந்தன் குரலும் கேட்கிறேன்,
கேட்டு கேட்டு நிற்கும் கண்கள் மட்டும் இன்று,
வார்த்து வார்த்து வங்கம் கண்ணீர் ஆனதிங்கு..
~
காற்று போகாத இடம் தேடி நெஞ்சம்,
உன் மனதை சேரும் என்று நம்பியே,
வந்த இதயம் காணாமல் போனதே..
ஏக்கம் இமையமாய் இறுகி வளருதடி,தூக்கம் இமையிடம் இணைய மருத்ததடி,
தாக்கும் தனிமையை தூக்கில் ஏற்றி விட,
நேரில் வந்து என் நெஞ்சம் இயக்கிவிடு..
~
நேற்று இரவிலே நீ என் கனவிலே,
கால ஓட்டத்தில், இரு குழந்தை அருகிலே,
அன்பு கொஞ்சமல்ல, எளிதாய் எடுத்துச் சொல்ல..
ஒன்று இரண்டு என்று எண்ணி முத்தமிட,
கன்னம் தீண்டும் முன்னே, பிஞ்சு கைகள் குறுக்கிட,
வந்த வெட்கம் இன்று வேதனையை தூண்டிட..
துக்கம் மட்டுமே மிஞ்சிய வாழ்வில் - சொல்,
எப்படி கழிப்பேன் எஞ்சிய வாழ்வை..



No comments:
Post a Comment
Have Pride in How Far U have come and Have Faith in How Far U can go ! ! !