இதோ இந்த நேரம் (Aug 19th, 1.30pm)..
சரியாய் முன்சென்றேன் 24 வருடம்..
காலோ தலையோ முன்வைத்து,
கருவறை தாண்டி உலகில் வந்தேன்..
பெண்பிள்ளை வேண்டிய தந்தைக்கு,
வில்லனை போல தெரிந்திருப்பேன்,
உணர்வாய் வளர்த்த என் அன்னைக்கு,
ஒரு ஜென்மத்தை புதிதாய் கொடுத்திருப்பேன்,
திக்கி விழுந்த புது வார்த்தைகளும்,
தட்டி விழுந்த முதல் நடை பயணம்,
அர்த்தம் புரியாத தந்தை மரணம் -இன்று,
நினைவில் இல்லாத அவர் உருவம்,
எண்ணம் எட்டாத இடம் துவங்கி,
காதல் கலங்கவிட்ட இந்த நொடி வரையும்,
எண்ணி பெருமைப்பட என்ன செய்தேன்,
என் அன்னை கை பிடித்தே நின்றிருந்தேன்..
இங்கு, என்னை கொண்டாட ஒன்றும் இல்லை,
நான் வந்து விழுந்த நாள் என்னுதில்லை..
என்னை பொறுத்தவரை இது அவள் தருணம்,
என் பிறந்தநாளே என் அன்னை தினம்..
இனிய என் அன்னை தின வாழ்த்துக்கள்!!
Tuesday, August 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
Have Pride in How Far U have come and Have Faith in How Far U can go ! ! !